மூன்றாவது முறையாக மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு தர்மகுமரன் போட்டி

மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் ஜூன் 24-
ம இகா உயர் மட்ட பதவிகளுக்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கும் தருணத்தில் மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு நாடாறிந்ந சமூக சேவையாளர் தர்மகுமரன் மீண்டும் போட்டியிடுகிறார்.

கடந்த இரண்டு முறை மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற தர்மகுமரன் இம்முறையும் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மக்களின் குரலாக நான் தொடர்ந்து ஒழிப்பேன். இந்திய சமுதாயத்தின் நலன் கருதி ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் எடுக்கும் எல்லா திட்டங்களுக்கும் பக்கம் பலமாக இருப்பேன் என்று அவர் சொன்னார்.

21 பேர் கொண்ட மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு 45 பேர் போட்டியிட்டாலும் சேவையின் அடிப்படையில் மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் சொன்னார்.

இதற்கு முன்னர் ம இகா இளைஞர் பிரிவின் மூலம் மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி இருக்கிறேன்.

இந்திய இளைஞர்கள் முன்னேற்றத்திற்கும் சிறு தொழில் வணிகர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து சேவையாற்றி இருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles