பூச்சோங்: ஜூன் 25-
கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியம் காட்டக் கூடாது என்று நீலாய் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த டத்தோ சரவணக்குமார் கூறினார்.
78 ஆண்டுகள் வரலாற்றை கொண்ட கின்றாரா தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதி உடைக்கப்படும் சம்பவம் தொடர்ந்து சர்ச்சையாக உள்ளது.
வீடமைப்பு திட்டத்திற்காக சாலையை மேம்படுத்த கின்ராரா தமிழ்ப்பள்ளியின் ஒரு பகுதி கட்டிடத்தை உடைக்கப்படவுள்ளது.
இதற்கான முயற்சிகளை கோலாலம்பூர் மாநகர் மன்றமே மேற்கொண்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட கின்றாரா தமிழ்ப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளியில் மாநகர் மன்றத்தின் நடவடிக்கையால் வரும் காலங்களில் இடப்பற்றாக்குறை பிரச்சினை நிலவலாம்.
அதேவேளையில் ஒரு மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்வதற்கு முன் மற்ற கட்டடங்களுக்கு பிரச்சினை வருமா என்பதை மாநகர் மன்றம் ஏன் ஆராயவில்லை என்பது என்னுடைய கேள்வியாகும் என்று சரவணக்குமார் கூறினார்.