இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை.. வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் : பி.ஜே.டி.யின் நவீன் பட்நாயக் அதிரடி அறிவிப்பு!!

புபனேஸ்வர் : நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி முடிவு எடுத்துள்ளது.

ஒடிசாவில் நடந்து முடிந்த 2024 மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்தது. தொடர்ந்து 24 ஆண்டுகள் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருந்த நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்தார்.

மக்களவையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சட்டமன்ற தேர்தலில் பாஜக முதல்முறை எழுச்சி பெற்று ஆட்சியை பிடித்தது. மக்களவையிலும் பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில் தன்னுடைய நிலைப்பாட்டில் அதிரடி மாற்றத்தை நவீன் பட்நாயக் கொண்டு வந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles