
சிம்மோர், ஜுன்.24: கடந்தாண்டு எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற அதாவது 5 ஏ மற்றும் அதற்கு மேல் கிடைக்கப் பெற்ற 62 மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர் என்று கந்தான் ஸ்ரீ கல்லுமலை காளியப்பன் ஆலயத்தலைவர் க.தியாகராஜன் கூறினார்.
ஆலயம் என்பது வழிபாட்டு தலமாக இருப்பதோடு, மக்கள் சேவை மையமாக திகழ்வது அவசியமாகும். அதன் அடிப்படையில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டது. பேராக் மாநிலத்தில் பல இடங்களிலிருந்து மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை அளித்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

காலையில் மாணவர்கள் சிறப்பு வழிபாட்டை செய்தனர். குறிப்பாக, காயத்திரி மந்திரம் குறித்து சிறப்பு விளக்கவுரை வழங்கப்பட்டது. அத்துடன், ஆன்மீகத்தை பற்றியும் இறை வழிபாடு குறித்தும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நிறைவு விழாவில், 62 மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மாலையணித்து மற்றும் நினகவு சின்னம் வழங்கப்பட்டது. அதன் பின் வருகையாளர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டதாக தியாகராஜன் கூறினார்.