செ.வே.முத்தமிழ்மன்னன்
கோலாலம்பூர், ஜூன் 24-
டீசல் விலை ஏற்றம் சுற்றுலா பேருந்து நடத்துபவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை கொடுத்துள்ளது என்று மலேசிய இந்தியர் சுற்றுலா முகவர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ அருள்தாஸ் தெரிவித்தார்.
ஆகவே டீசல் மானியத் திட்டத்தில் எங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்று மலேசிய அரசிடம் அவர் கோரிக்கையை முன் வைத்தார்.
டீசலுக்கான உதவித் தொகையை அரசாங்கம் அகற்றி விட்டது.
அதே சமயம் பல டீசல் வாகனங்களுக்கு அரசாங்கம் உதவித் தொகையை வழங்கியுள்ளது.
இந்த உதவித் தொகையை பெறும் வாகனங்களின் பட்டியலில் சுற்றுலா பேருந்து மற்றும் சுற்றுலா வேன் இடம் பெறவில்லை என்பது பெரும் வேதனையாக இருக்கிறது.
இதனால் சுற்றுலா பேரூந்து ஓட்டுநர்களும் அதன் நடத்துநர்களும் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள 1,200 க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலா முகவர்கள் எங்கள் சங்கத்தில் இடம் பெற்றுள்ளனர்.
டீசல் விலை உயர்வால் 50 விழுக்காடு செலவீனம் அதிகரித்துள்ளது .
அதிகமானோரர் டீசல் விலை உயர்வால் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று அவர் சொன்னார்.
இப்போதைக்கு
டீசல் விலை உயர்வை ஈடுகட்ட தங்கள் சொந்த மூலதனத்தை செலவழிக்க வேண்டியுள்ளது.
இது சுற்றுலா பேருந்து நடத்துனர்களுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
விசா தளர்வால் இப்போது சீன மற்றும் இந்திய நாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த தருணத்தில் டீசல் விலை உயர்வு எங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி விட்டது என்று அவர் வேதனையோடு தெரிவித்தார்.