ம இகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு எம்.காந்தன் போட்டி.

கோலாலம்பூர் ஜூன் 25-
ம இகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 45 பேர் போட்டியிடுகிறார்கள். அதில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பண்டார் துன் ரசாக் புக்கிட் அங்கீரிக் கிளைத் தலைவர் எம். காந்தன் தெரிவித்தார்.

நமது சமூகம் எதிர்நோக்கி இருக்கும் அரசியல் சவால்களை சமாளிக்க ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மற்றும் விலாயா மாநில தலைவர் டத்தோ சைமன் ராஜா ஆகியோருடன் இணைந்து பணியாற்ற முன் வந்திருக்கிறேன்.

நாட்டில் நமக்கும் சம வாய்ப்புகள் மற்றும் தேசத்தின் எதிர்காலத்தில் வலுவான குரல் இருப்பதை உறுதி செய்ய நானும் முன் வந்திருக்கிறேன்.

மஇகாவில் நீண்ட காலம் அயராது பணியாற்றிய எனது அருமை பாட்டி கமலாட்சி ஆறுமுகம் ஆசியோடு நான் அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன்.

அவர் கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் இவர் ம இகா மகளிர் பிரிவின் உச்சமன்ற உறுப்பினராக இருந்து அளப்பரிய சேவை ஆற்றியவர்

எனது அரசியல் பயணத்திற்கு ஒரு முன்னோடியாக மஇகாவும் என் பாட்டியும் விளங்குகிறார்கள். என் கல்விக்கு கட்சி உதவியது நான் என்றும் மறக்க மாட்டேன். எனது பாட்டி கமலாட்சி ஆறுமுகம் அவர்களால் அரசியலில் முழுமூச்சாக களம் இறங்கி இருக்கிறேன்.

கட்சி மற்றும் இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
என் பாட்டி கமலாட்சி ஆறுமுகம் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

மஇகாவுக்கும் எனது இந்திய சமுதாயத்தின் நல் வாழ்விற்கு பங்களிப்பதில் எனது உண்மையான அர்ப்பணிப்பு இருக்கும்.

ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் அர்த்தமுள்ள ஒரு சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும். இந்திய சமுதாயத்தின் குரல்களுக்கு செவி சாய்த்து அவற்றுக்கு தீர்வு காண நானும் உறுதி பூண்டிருக்கிறேன்.

ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் மற்றும் விலாயா மாநில தலைவர் டத்தோ சைமன் ராஜா ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் என்னால் முடிந்த அளவுக்கு இந்திய சமுதாயத்திற்கு அர்ப்பணிப்பேன்.

ம இகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டிடும் என்னை பேராளர்கள் வெற்றி பெற செய்யும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நம் ஒன்றிணைந்து மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றினால் நம் சமுதாயம் மென்மேலும் முன்னேறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் டத்தோ தேவசகாயம் கலந்து சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles