ஜோகூர்பாரு, ஜூன் 27-
பல ஆண்டுகளாக கிடப்பில் கிடைக்கும் டங்கா பேய் ஈமகாரிய இடத்திற்கான மாற்று நிலத்தின் நிலை என்ன என்று சமூக ஆர்வலரான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலம் மற்றும் நிதி ஒதுக்கபட்டுவிட்டதாக இதற்கு முன்பு வந்த தகவல்களில் தமக்கு சந்தேகங்கள் எழுகின்றன.
எனவே அதன் நம்பக தன்மை குறித்து ஜொகூர் மாநில அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.
அதில் மறைந்திருக்கும் ரகசியங்களை வெளிக் கொணர மாநில எதிர்கட்சி தலைவரும் ஸ்தூலாங் லாவுட் சட்டமன்ற உறுப்பினருமான திரு சன் சேங் காவ் @ஆண்ரூ சேன்ங்கை தனது × வளைதலைத்தின் முலம் கேட்டு கொண்டதோடு, இந்திய சமுதாயத்தின் நின்ட நாள் கோரிக்கையான அந்த நிலம் விவகாரம் குறித்து ஜசெகவுக்கும் பொறுப்பு இருப்பதை மறந்துவிட வேண்டாம் என நினைவுறுத்துவதாக திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தனது அறிக்கையில் கேட்டுகொண்டார்.