விஜய் படத்துடன் மோதும் கங்கனாவின் ‘எமர்ஜென்சி’

நடிகையும் மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத், இயக்கியுள்ள படம், ‘எமர்ஜென்சி’. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
படத்தை இயக்கியதோடு இந்திரா காந்தியாகவும் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அதன்படி, செப்.6-ம் தேதி வெளியாக இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படம் செப். 5-ம் தேதி வெளியாகிறது. இதுவும் பான் இந்தியா படமாக வெளியாக இருப்பதால் இரண்டும் ஒரே நேரத்தில் மோதுகிறது.

‘தி கோட்’ படத்தில் விஜய்யுடன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா உட்பட பலர் நடித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles