மும்பை: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அனுஷ்கா, சந்தானம், ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்த கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான லிங்கா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா.
இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்ஷி சின்ஹா இந்த ஆண்டு ‘ஹீராமண்டி’ வெப்சீரிஸ் மற்றும் ‘படே மியான் சோட்டே மியான்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில், தனது நீண்ட கால காதலர் ஜாகீர் இக்பாலை அவர் கரம் பிடித்தார்.
மும்பையில் உள்ள சோனாக்சி சின்ஹாவின் இல்லத்தில் கோலாகலமாக திருமண விழா நடைபெற்றது. சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் வெள்ளை நிற ஜொலிக்கும் உடையை அணிந்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்துக்கு சோனாக்ஷி சின்ஹாவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில், கடைசியில் திருமணத்தில் சோனாக்ஷி சின்ஹாவின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சோனாக்ஷி சின்ஹாவின் தந்தை நடிகர் சத்ருகன் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது.