ஈப்போ, ஜுன்.27
பேராக் மாநில ம இ கா வில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது.
நேற்றுவரை 21 வேட்மனு தாக்கல் செய்தவர்களில் 10 பேர் மட்டுமே வாபஸ் பெற்றக்கொண்டனர். மீதம் 11 வேட்பாளர்களில் பாகன் செராய் தொகுதித் தலைவர் ஆர்.பி. ஜெயகோபாலன் வாபஸ் பெற்றுக்கொண்டார்.
ஆகையால், தைப்பிங் தொதியைச் சேர்ந்த வரதன் பேராக் ம இ கா ஆட்சிக்குழுவில் இணைகிறார்.
அதன் அடிப்படையில் பேராக் மாநிலத்தில் போட்டிகள் கிடையாது என்று உறுதியாகி விட்டது.
ஆர்.பி. ஜெயகோபாலனின் தன்னலமற்ற செயல் மற்றும் மாநிலத்தில் கட்சியின் மேம்பாட்டிற்கு அவர் எடுத்த முடிவை கண்டு பலரும் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இம்மாதிரியான பொதுநலம் மற்றும் கட்சியின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் தலைவர்கள் இக்கட்சியை வழிநடத்த தகுதியானவர்கள்.
பேராக் மாநிலத்தில் எந்தவொரு போட்டியும் நிலவுக்கூடாது, அனைத்தும் சுமூகமாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் ம இ கா வின் தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு, ஆதரவாக டான்ஸ்ரீ இராமசாமி தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார். அவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதன்வழி டான்ஸ்ரீ இராமசாமி தம்முடைய தலைமைத்துவ பண்பினை சிறப்பாக வெளிகொணர்ந்துள்ளார். அவருக்கு பேராக் மாநில ம இ கா வின் வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகட்டும்.
இச்சம்பவம் எதைக் குறிக்கிறது என்றால் பேராக் மாநில ம இ கா புதிய தலைமைத்துவத்துடன் புதிய பொலிவுடன் பீடுநடை போட தயாராகி விட்டது.
பேராக் மாநில ம இ கா வில் இடம்பெறும் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பின்வருமாறு; டான்ஸ்ரீ இராமசாமி, டத்தோ வ.இளங்கோ, எஸ்.ஜெயகோபி, கோ.சண்முகவேலு, மு. திருஞானசம்பந்தன், எஸ்.மோகன், வீரன், ராஜன், மணிகண்டன் மற்றும் வரதன்.