ஈப்போ, ஜுலை. 6:
இந்த படைப்பு உண்மைக் கதைகள் கொண்டவை. இதில் கொண்டுவரப்பட்ட கதைகள் மற்றும் சம்பவங்கள் படிப்பதற்கு சுவாரயமாகவும், மேலும் படிக்க ஆவலை தூண்டும் நிலைப்பாட்டை உருவாக்கி வருகிறது.
ஆகையால் இந்த “அன்பின் ஆராதனை” நூலை அனைவரும் வாசிக்கும் நூலாகும் என்று இந்நிகழ்வின் சிறப்பு பிரமுகரான மகப்பேறு மருத்துவர் டாக்டர் வ.ஜெய்யபாலன் கூறினார்.
இன்றைய காலகட்டத்தில் வாசிக்கும் மற்றும் எழுதும் பழக்கமும் நம் இந்தியர்களிடையே குறைந்து வருகிறது.
இது தொடருமானால் நாம் பெரிய பாதிப்பை எதிர்நோக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று அவர் வருத்தமாக தெரிவித்தார்.
இன்றைய இளைய சகோதரர் சமூகத்தினர் எழுத்துத் துறையில் ஈடுபட மலேசிய எழுத்தாளர் சங்கம் அதிகமான பயிற்சி பட்டறைகளை நாடு முழுவதும் செய்வது மிகவும் அவசியமாகும்.
இத்தகைய பயிற்சி பட்டறை வாயிலாக அதிகமான தமிழ் எழுத்தாஏளர்களை உருவாக்க முடியும். இதன் வாயிலாக அதிகமான படைப்புகளை உருவாக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
வாழும் பொழுதே சேவை செய்தவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் நூல் ஆசிரியரின் வாழ்க்கையில் தூண்டு கோலாக இருந்த மூவரை சிறப்பித்தார் நூலாசிரியர் முனைவர் சேகர் நாராயணன்.
சிறப்பு செய்யப்பட்ட சான்றோர்கள்.
கூலிம் மேனாள் தலைமை ஆசிரியர் பழநி; பகாங் மெந்தக்காப்பைச் சார்ந்த அரியன் கோபால் மற்றும் ஈப்போ நவஜோதி உணவக உரிமையாளர் இராமலிங்கம்.
இந்நிகழ்வின் சிறப்பு வருகையாளர்களாக மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் மேனாள் தலைவர் ராஜேந்திரன் பெருமாள், டிரா தலைவர் சி. சரவணன், மருத்துவர் வ. ஜெயபாலன், ஸ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குநர் க. சுரேன், ஈப்போ டாக்டர் விஜயன், வழக்கறிஞர் விவேகானந்தா மற்றும் டத்தோ இரா. தங்கராஜா சிறப்பு வருகை மேற்கொண்டனர்.
டிரா தலைவர் சி.சரவணன் முதல் நூல் பெறுநராக நூலை பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து இதர பிரமுகர்களும் வருகையாளர்களும் நூலை பெற்றுக்கொண்டனர்.