
மா. பவளச்செல்வன்
தம்பூன், ஜூலை 9-
இந்நாட்டில் உள்ள இந்திய சமுதாயத்தை அரசாங்கம் ஒரு போதும் புறக்கணிக்கவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் தெரிவித்தார்.
அதிருப்தி இருந்தால் குறைகள் இருந்தால் எடுத்து கூறுங்கள். அதற்காக கோபப்பட வேண்டாம்.
என்னை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதமராகவும் தேர்வு செய்த தம்பூன் இந்திய சமூகத்திற்கு எனது நன்றி.
என்னை ஆதரித்த இந்திய சமுதாயத்தை நான் மறந்துவிட மாட்டேன். அவர் களின் தேவைகளை பூர்த்தி செய்வேன் என்று அவர் சொன்னார்.
இந்திய சமுதாயத்திற்கு மித்ரா மட்டும் அல்ல. தெக்குன், அமானா இக்தியார், பேங்க் ரக்யாத் ஆகியவற்றின் வாயிலாக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து அரசாங்கத்தின் அனைத்து உதவித் திட்டங்களின் வாயிலாகவும் இந்திய சமுதாயம் பயனடைந்து வருகிறது.
மெட்ரிகுலேஷன் விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாக இருந்து வந்தது.
ஆகையால் இப்போது எஸ்பிஎம் தேர்வில் 10ஏ அல்லது அதற்கும் மேலாக எடுக்கும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஆகையால் இந்திய சமுதாயத்தின் தேவைகளை அரசாங்கம் தொடர்ந்து பூர்த்தி செய்தி வருகிறது என்று தம்பூனில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்கும் தரப்பினர் பற்றி அரசாங்கம் கவலைப்பட்டது இல்லை.
அனைத்து சமூகத்தின் தேவைகளையும் அரசு பாதுகாக்கும் என்றார்.