ஈஷாவின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் மாண்புமிகு சரஸ்வதி நல்லதம்பி !

கோம்பாக், ஜூலை 9-
இணைய பகடிவதையால் இந்திய பெண் ஈஷா எனப்படும் ராஜேஸ்வரி சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார்.

இவரின் மரணம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இவருக்கு மிரட்டல் விடுத்த பெண்மணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ம இகா தேசிய மகளிர் அணி தலைவி திருமதி மாண்புமிகு சரஸ்வதி நல்லதம்பி மற்றும் துணை தலைவி டாக்டர் தனலெட்சுமி ஆகியோர் இன்று கோம்பாக் செத்தியாவில் உள்ள ஈஷாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினர்.

அன்பு மகளை இழந்து துயறுரும் அவரின் தாயாரும் குடும்ப உறுப்பினர்களை பார்க்கும் போது மனம் பெரும் வேதனையை அளிக்கிறது என்று சரஸ்வதி நல்லதம்பி தெரிவித்தார்.

இந்த குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles