யார் துரோகி? எடப்பாடியை சுற்றிவளைத்து தாக்கும் அண்ணாமலை, ஓபிஎஸ்:!!!! பதிலடி கொடுக்கும் அதிமுக நிர்வாகிகள்;

சென்னை: ஜூலை 9-
கட்சிக்கும், கூட்டணிக்கும் துரோகம் செய்தது யார் என்று அண்ணாமலையும், ஓ.பன்னீர்செல்வமும் சுற்றிவளைத்து எடப்பாடி பழனிசாமி மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

இதற்கு எடப்பாடி பழனிசாமியும், அதிமுக மூத்த தலைவர்களும் ஒருசேர பதிலடி கொடுத்து வருவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தனது அருகில் எடப்பாடி பழனிசாமியை அமர வைத்தார்.ஆனால் டெல்லியில் இருந்து திரும்பி வந்த ஓரிரு நாளில் கூட்டணியை விட்டு அவர் வெளியேறினார்.

இதுதான் துரோகம். எடப்பாடி பழனிசாமி துரோக மனப்பான்மை கொண்டவர். யாருக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை என்றும் பாஜ தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைதான் துரோகத்தின் மொத்த உருவம்.அவர் ஒரு பச்சோந்தி என்று பதிலுக்கு சாடினார்.
அதிமுக என்ற கட்சியை எம்ஜிஆர் அண்ணாவின் பெயரில் தொடங்கினார். அந்த அண்ணாவையே அவமானப்படுத்தியவர் அண்ணாமலை.

நாங்கள் மானம், ரோசம் உள்ளவர்கள். அதனால்தான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles