காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஜூலை
11 –
ம இகா தேசிய உதவித் தலைவர் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்கள் தேர்தல் மிகவும் நேர்மையாகவும் நடத்தப்பட்டது.
தேசிய ரீதியில் நடைபெற்ற ம இகா தேர்தல்களில் எந்த இடத்திலும் சண்டையும் சச்சரவும் இல்லை.
எல்லாம் சமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது .எந்தவொரு புகார்களும் இல்லை.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தேர்தல் குழுத் தலைவராக இருந்து சிறப்பான முறையில் தேர்தலை நடத்தி இருக்கிறார்.
ஆகவே ம இகா தேர்தல்கள் முறையாக நடத்தப்படவில்லை என்று கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை என்று அவர் சொன்னார்.
ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பேராளர்களும் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப வாக்களித்து இருக்கிறார்கள்.
தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் எந்த இடத்திலும் தனக்கு வேண்டிய வேட்பாளர்களை அழைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை
என்று அவர் சொன்னார்.
இன்று ம இகா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் ம இகா தேசிய உதவித் தலைவர்களான டத்தோ டாக்டர் நெல்சன், டத்தோ முருகையா உட்பட மத்திய செயலவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.