காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஜூலை 11-
ம இகா யாரையும் இழக்க நாங்கள் விரும்பவில்லை . அந்த வகையில் ஒரு மூத்த தலைவரான டத்தோ டி. மோகன் தொடர்ந்து கட்சியோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ அசோஜன் கேட்டுக் கொண்டார்.
மஇகா தேசிய உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அனைவருக்கும் சமமான வாக்குகள் கிடைத்துள்ளன. கட்சியில் நீண்ட அனுபவம் வாய்ந்த டத்தோ மோகன் தொடர்ந்து கட்சியோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று இன்று ம இகா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்
இன்று ம இகா தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதர ம இகா தேசிய உதவித் தலைவர்களான டத்தோ முருகையா டத்தோ டாக்டர் நெல்சன், டான்ஸ்ரீ இராமசாமி, ம இகா மத்திய செயலவை உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.