மைக்ரோசாப்ட் மென்பொருள் முடக்கம் எதிரொலி : உலகம் முழுவதும் 1,390 விமானங்கள் ரத்து

மைக்ரோசாப்ட் மென்பொருள் சிக்கலுக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தகவல் தெரிவிட்டுள்ளது.

உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் செயலிழந்ததாக தகவல்கள் வெளியாகியது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மைக்ரோசாப்ட் சேவைகள் உலகளாவிய செயலிழப்பை சந்தித்து வருவதாக மைக்ரோசாப்ட் உறுதிப்படுத்தியது.

மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலி உள்ளிட்ட அனைத்து சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மென்பொருள் செயலிழந்ததால் சர்வதேச அளவில் வங்கி, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன

விண்டோஸ் மென்பொருள் சேவை முடக்கத்தால் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தொடர்பான பணிகள் முடங்கின. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒருங்கிணைப்பு குழுவின் இணையதள பக்கங்கள் செயலிழந்துள்ளன

விண்டோஸ் மென்பொருள் முடங்கியதால் உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 1,390 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ஏற்பட்டுள்ள சர்வர் கோளாறு சைபர் தாக்குதல் கிடையாது என்றும் தெரிவிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles