
ஷா ஆலம், ஜூலை 22- சிலாங்கூர் ஆரம்ப குழந்தை மற்றும் கல்வி
பராமரிப்பு (இம்பாக் சிலாங்கூர்) திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 600
வீட்டு குழந்தைப் பராமரிப்பாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
இரண்டு நாள் இலவச சிறார் மேம்பாட்டு ஊக்கப் பயிற்சித் திட்டத்தின்
வாயிலாக அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதாக
யாயாசான் அனாக் சிலாங்கூர் (யாவாஸ்) பொது நிர்வாகி கான் பெய் நீ
கூறினார்.
இவ்வாண்டில் 1,000 குழந்தை பராமரிப்பாளர்களுக்கு பயிற்சி
வழங்கப்படுவதை உறுதி செய்யும் யாவாஸ் அறவாரியத்தின்
நோக்கத்திற்கேற்ப இந்த பயிற்சித் திட்டம் அமைந்துள்ளது என்று அவர்
சொன்னார்.
இதுவரை 600 குழந்தை பராமரிப்பாளர்கள் 11 பயற்சிகளை முழுமையாக
முடித்த பங்கேற்புக்கான சான்றிதழ் பெற்றுள்ளனர். எஞ்சிய 400
பேருக்கு இவ்வாண்டிற்குள் பயிற்சியளிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்
என்று அவர் குறிப்பிட்டார்.