

கோலாலம்பூர்:
நாட்டில் 800 வசதிக் குறைந்த வர்த்தகர்களுக்கு உதவ 3.83 மில்லியன் ரிங்கிட் நிதி பேங்க் ரக்யாட் ஒதுக்கியுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
RAKYATpreneur 5.0, Bank Rakyat UNIpreneur 4.0 ஆகியத் திட்டங்களை பேங்க் ரக்யாட்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரு திட்டங்களின் வாயிலாக வசதிக் குறைந்த வர்த்தகர்கள், மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 1,833 பேர் பயன் பெற்றுள்ளனர். அவர்களுக்காக 6.63 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் உலக வங்கி குழுவின் டிராக்கிங் ப்ரோக்ரஸ்: சமூக நிதியின் தாக்க கண்காணிப்பு அறிக்கையில் இந்த இரண்டு திட்டங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இது இத் திட்டங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகும் என்று அவர் கூறினார்.
பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் சமூக நல்வாழ்வை வலுப்படுத்துவதில் இத்திட்டம் முக்கிய பங்கை ஆற்றுகிறது.
வறுமை இல்லா இலக்கை அடைவதில் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இத்திட்டம் ஒத்துப்போகிறது.
மேலும் வறுமையிலிருந்து விடுபடுவதற்கான விளிம்புநிலைக் குழுக்களின் திறனை மேம்படுத்த இது உதவும்.
இவ்விரு திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்ட பேங்க் ரக்யாட்டை நான் பாராட்டுகிறேன்.
இதன் மூலம் தொழில் முனைவோர் தங்கள் தொழில் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.
பேங்க் ரக்யாட்டில் இன்று நடைபெற்ற இவ்வாண்டுக்கான இத் திட்டங்களின் அறிமுக விழாவில் பேசிய டத்தோ ரமணன் இவ்வாறு கூறினார்.