
ஜார்ஜ் டவுன்: ஜுலை 23-
பினாங்கு துணை முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படவுள்ளதாக வெளிவந்துள்ள தகவலைப் பினாங்கு மாநில முதல்வர் சௌ கோன் இயோவ் நிராகரித்துள்ளார்.
ஜக்டிப் சிங் டியோ தற்போது மருத்துவ விடுப்பில் இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
ஆட்சிக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிக விடுப்பு கேட்டதாகக் கூறப்படும் தகவலைப் பினாங்கு மாநில துணை முதல்வர் ஜக்டீப் சிங் டியோ மறுத்துள்ளார்.
அதே வேளையில் கோலாலம்பூரில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக விடுமுறைக்கு விண்ணப்பித்ததாக அவர் கூறினார்.
கணுக்கால் பரிசோதனையை மேற்கொள்ள அனுமதிக்கும் விடுப்பு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
ஜூலை 22-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 வரை 11 நாட்களுக்கு அவரது விடுப்புக்கு தாம் ஒப்புதல் அளித்ததாகச் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.