
பாரிஸ், ஜூலை 28-
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்று தங்க வேட்டையை தொடங்கியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய வீராங்கனை கிரேஸ் பிரவுன் சைக்கிளிங்கில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தங்கப் பதக்கத்துடன் தனது பதக்க வேட்டையை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது.