கோலாலம்பூர், ஜூலை 30 – நாட்டில் தரவுகளைப் பாதுகாப்பதற்கும், தரவு மையங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் போதுமான கட்டமைப்புகள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதற்கு ஒரு தரவு ஆணையத்தை நிறுவ டிஜிட்டல் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
இந்த ஆணையத்தை நிறுவ, அமைச்சகம் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2010 ஐ திருத்த திட்டமிட்டுள்ளது என டிஜிட்டல் அமைச்சர் கோபிந் சிங் தெரிவித்தார். இது அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் நேஷனல் பிஎச்டி மற்றும் சைபர் செக்யூரிட்டி மலேசியா இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்