கோலாலம்பூர் ஜூலை 30-
நாட்டில் உள்ள
தமிழ்ப்பள்ளிகளை விட சீனப்பள்ளிகளுக்கே மது மற்றும் சூதாட்ட நிறுவனங்கள் உதவி செய்ய விருப்பம் கொண்டுள்ளது என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி தெரிவித்தார்.
ஒருவேளை மது நிறுவனங்கள் தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவிக்கரம் செய்ய விரும்பினால் அதனை தமிழ்ப்பள்ளிகள் நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ளும்.
தாய்மொழிப்பள்ளிகளுக்கு மது நிறுவனங்கள் அல்லது புகையிலை தயாரிக்கும் நிறுவனங்கள் உதவிகளை மேற்கொண்டால் உடனே சீனப்பள்ளிகளை தான் மேற்கோளாக சொல்ல முடிகிறது.
இவ்வாறான உதவிகள் தமிழ்ப்பள்ளிகளுக்கும் கிடைத்தால் அதனை நிராகரிக்க போவதில்லை. ஆனால், மது நிறுவனங்கள் அல்லது புகையிலை நிறுவனங்கள் சீனப்பள்ளிகளுக்கே உதவிக்கரம் நீட்ட விரும்புகிறது என்று சொன்னார்.
சூதாட்ட நிறுவனங்கள் அல்லது புகையிலை நிறுவனங்களிடமிருந்து தமிழ்ப்பள்ளிகள் மிகப்பெரிய மானியமும் நன்கொடையையும் பெற்றதில்லை என்றார் அவர்.
தாய்மொழிப்பள்ளிகளுக்கு வழங்கப்படும் நன்கொடை தொடர்பாக அரசாங்கம் கடுமையாக கருதினால் அனைத்து தாய் மொழிப்பள்ளிகளுக்கும் முழு நிதி வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
அரசாங்கம் தாய்மொழிப்பள்ளகளுக்கு முழுமையான நிதியுதவிகளை வழங்கினால் மது நிறுவனங்கள் நன்கொடை அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் சுட்டி காட்டினார்