
பாரிஸ், ஜூலை 30-
Paris Olympics 2024 போட்டியில் இந்தியாவிற்கு 2வது வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற 10மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்று அசத்தியது.
ஏற்கனவே தனிநபர் ஏர்பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில், மனு பாக்கர் வெண்கலம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், தென்கொரியாவின் ஓ யே ஜின் & லீ வான் ஜோ ஜோடியை 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றனர்.
124 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே ஒலிம்பிக் எடிஷனில், இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்