
கோலாலம்பூர் ஜூலை 30-
மலேசியாவை ஆட்சியமைத்த அரசாங்கங்களில் ஒற்றுமை அரசாங்கம் முழு சர்வதிகார அரசாங்கமாக உள்ளது என்று பெர்சே அமைப்பின் முன்னாள் தலைவர் டத்தோ அம்பிகா ஶ்ரீநிவாசன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
1984ஆம் ஆண்டு அச்சு இயந்திரம், பதிப்பக சட்டத்தை அரசாங்கம் ரத்து செய்யாமல் சமூக ஊடகங்களுக்காக உரிமம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதை கூறி அவர் தமது வருத்தத்தைப் பதிவு செய்தார்.
1984ஆம் ஆண்டு அச்சு இயந்திரம், பதிக்க சட்டத்தை நிலைநிறுத்துவதோடு உரிமம் வழங்குதல் சட்டத்தை இயற்ற நடப்பு ஒற்றுமை அரசாங்கம் செயல்படுவது நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு விஷயமாகும் என்று அவர் சொன்னார்.
மலேசியர்கள் பார்த்ததிலேயே சர்வாதிகார அரசாங்கமாக நடப்பு ஒற்றுமை அரசாங்கம் விளங்குவதாக வழக்கறிஞருமான அவர் தெரிவித்தார்.