கோலாலம்பூர் ஜூலை 30-
மலேசிய முத்தமிழ்ச் சங்க ஏற்பாட்டில்
மறை மலையடிகளாரின் வரலாற்று சுவடுகள் நூல் வெளியீட்டு விழா கடந்த வ
ஜூலை 26 ஆம் தேதி மாலை 5 மணிக்கு டான்ஸ்ரீ சோமா அரங்கில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
தமிழ் மழை தி. தாயுமானவன் அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார்.
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் தலைமையில் இந்த நூல் வெளியீட்டு விழா வில் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.
மலேசிய முத்தமிழ் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் மனோகரன், செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணைந்து முத்தமிழ் சங்க பொறுப்பாளர்கள் இந்த விழாவை விமர்சையாக நடத்திக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.