
சென்னை: ஆக 1-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக இன்று கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
இதேபோல, அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை கோவையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளேன் என்று அவர் சொன்னார்.
இதனிடையே திமுக ஆட்சியில் இதுவரை 1,921 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. ரூ. 6,147 கோடி மதிப்பில் கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
கோயில்கள் சார்பில் 10 கல்லூரிகளை உருவாக்கி உள்ளோம் என்றார்.
மேலும் கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் வகையில் கேரளா அரசுக்கு 5 கோடி ரூபாய் பொதுப்பணி அமைச்சர் வேலு மூலமாக கேரளா முதல்வர் பினராயி விஜய்னிடம் நேரில் வழங்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.