சிரம்பான் ஆக 1-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக விளங்கி வந்த டத்தோ மாணிக்கம்
பாஸ் கட்சியில் இணைத்துள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு முன்னர் ம.இ.காவிலிருந்து வெளியேறிய முன்னாள் நெகிரி செம்பிலான் மாநில ம.இ.கா தலைவர் டத்தோ எல். மாணிக்கம் தற்போது பாஸ் கட்சியில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களுக்குச் சேவை செய்ய தற்போதைக்குப் பாஸ் கட்சி சிறந்த அரசியல் கட்சியாக விளங்கி வருகிறது என்று அவர் கூறினார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பாஸ் கட்சி ஆதரவாளர்கள் மன்றத்தின் கீழ் தாம் பாஸ் கட்சியில் இணைந்தேன்.
அதே நாளில் எனக்கு கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டை கிடைத்ததாக அவர் சொன்னார். 40 வருடங்களாக அரசியல் பயணத்தில் இருக்கும் தாம் மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றிட பாஸ் கட்சியைத் தெரிவு செய்ததாக அவர் சொன்னார்.