
கோலாலம்பூர்: ஆக 1-இஸ்ரேல் சியோனிஸ் கைப்பாவையாக மெட்டா செயல்பட கூடாது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தாம் தெரிவித்த இரங்கல் செய்தி தொடர்பாக மெட்டா நிறுவனம் நீக்கியது முட்டாள்தனமானது என்று பிரதமர் அன்வார் கடுமையாக சாடினார்.
மெட்டா நிறுவனம் திமிராக நடந்துக்கொள்ளும் அதேவேளையில் பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்காமல் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மோசமான இஸ்ரேல் படையினரிடமிருந்து பாலஸ்தீனத்தை மீட்டெடுக்க போராடிய தலைவன் தொடர்பான பதிவுக்கு மெட்டா நிறுவனம் நீக்கியது பெரும் ஏமாற்றமாகும்.
மெட்டா நிறுவனம் இஸ்ரேலின் கைப்பாவையாக செயல்பட கூடாது. இதனை கடுமையான நினைவூட்டலாக முன்வைக்கிறேன் என்று பிரதமர் அன்வார் எச்சரிக்கை விடுத்தார்.