
பாரிஸ், ஆக 1-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் பியார்லி தான் – தீனா ஜோடி முன்னேறி சாதனை படைத்தது.
இன்று பிற்பகலில் நடைபெற்ற பரபரப்பான காலு இறுதி ஆட்டத்தில் பியார்லி தான் தீனா ஜோடி 21-11,21-13 என்ற புள்ளி கணக்கில் செட்டில் தென் கொரியாவில் புகழ்பெற்ற கிம் சூ இயோங் – கோங் ஹி யோங் ஜோடியை 40 நிமிடத்தில் வீழ்த்தியது.
தொடக்கம் முதல் இறுதி வரை தீனா ஜோடி வெளிப்படுத்திய ஆட்டம் ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் பியார்லி தான் தீனா ஜோடி உலகின் முதல் தர ஜோடியாக விளங்கும் சீனாவின் சென் குயின் சென் – ஜியா யி பான் ஜோடியை சந்திக்கிறது.
இதில் வெற்றி பெற்றால் மலேசியாவுக்கு பதக்கம் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது