கவனக் குறைவாகப் பேருந்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு!

ரொம்பின், ஆக 1- மரணம் ஏற்படும் அளவுக்கு பொறுப்பற்ற முறையில் வாகனத்தைச் செலுத்தி பயணிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு எதிராக இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் மெலடி வூன் ஸீ முன் தனக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஊன்றுகோல் மற்றும் முகக்கவசம் அணிந்து நீதிமன்றத்தில் ஆஜரான 50 வயதான ஜாம்ரி பொன் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஜூன் 9 ஆம் தேதி குவாந்தான் சிகாமாட் சாலையின் 126வது கிலோமீட்டரில்
நள்ளிரவு 12.30 மணியளவில் குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 20,000 வெள்ளி முதல் 50,000 வெள்ளி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41 (1)வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles