பெட்டாலிங் ஜெயா:
அரசாங்கத்தால் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள MyBrain 2.0 உபகாரச் சம்பளத்திற்கு இன்று தொடங்கி ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்க்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த 2016-ஆம் ஆண்டில் MyBrain15 நிறுத்தப்பட்ட திட்டத்தின் தொடர்ச்சியாகும். முதுகலை, முனைவர் பட்டப்படிப்புகளைத் தொடரத் தகுதியுள்ள அனைத்து மலேசியர்களுக்கும் கல்விக்கான பரந்த அணுகலை வழங்குவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
MyBrain 2.0 திட்டத்தின் முதல் கட்டமானது, வேலையில்லாத அல்லது நிலையான வருமானம் இல்லாத பொது மக்களைக் குறி வைக்கின்றது.
தனியார் உயர்க்கல்வி நிறுவனங்களின் (IPTS) விரிவுரையாளர்கள் 20 பொதுப் பல்கலைக்கழகங்களில் (UA) தங்கள் படிப்பைத் தொடரலாம்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகிய துறைகளை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்கும் வகையில் MyBrain 2.0 திட்டம் செயல்படுத்தவுள்ளது.