தியோ பெங் ஹாக்கின் மரண விசாரணையை மீண்டும் தொடங்க அரசாங்கம் ஒப்புதல்!

புத்ராஜெயா: ஆக 2-
தியோ பெங் ஹாக்கின் மரண விசாரணையை மீண்டும் தொடங்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்று
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன் தியோ பெங் ஹாக் மரணமடைந்தார்.

அவரின் மரண விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அவரின் குடும்பத்தார் வலியுறுத்தி வந்தனர்.

இதன் அடிப்படையில் பிரதமரையும் நாங்கள் சந்திக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார், மரணமடைந்த தியோ பெங் ஹாக்கின் குடும்பத்தாரை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் உடனிருந்தனர்.

இச் சந்திப்புக்கு பின் பிரதமர் கூறியதாவது,
15 ஆண்டுகளுக்கு முன்பு, தியோ பெங் ஹாக்கின் மரணம் தொடர்பான விசாரணை ஆவணங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles