
ஷா ஆலம், ஆக 2 – ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டது ஜியோனிச ஆட்சியின் ‘மிருகத்தனமான செயல்’ என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வர்ணித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டதை சிலாங்கூர் மாநில அரசு வன்மையாகக் கண்டிக்கிறது
.
ஜியோனிச ஆட்சியின் இந்த மிருகத்தனமான செயல் பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமைகள் மற்றும் அனைத்துலகச் சட்டங்களை அவர்கள் தொடர்ந்து மீறுவதன் அடையாளமாகும்.
மத்திய கிழக்கு மோதலில் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் உயிர்களை இழந்துள்ளனர் என்று முகநூலில் வெளியிட்டப் பதிவில் அவர் கூறினார்.
இந்த சோக நிகழ்வினால் ஆழ்ந்த துயரில் இருக்கும் பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு அமிருடின் தனது இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.