
வயநாடு : வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 240 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை.
ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாகிய கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு தோண்ட தோண்ட மனித உடல்கள் கிடைத்து வருகின்றன. அங்கே ஏற்பட்ட நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே காணாமல் போய் உள்ளன.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவாக தற்போதயை நிலச்சரிவு மாறி வருகிறது