குளுவாங்: ஆக 2-
ஜொகூர் மாநில மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினர் Sharifah Azizah Syed Zain தனது 63 வயதில் காலமானார்.
உள் இரத்தக் கசிவு காரணமாக அவர் நேற்று குளுவாங் Enche’ Besar Hajjah Khalsom மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலலின்றி காலமானார்.
குளுவாங் அம்னோ மகளிர் பிரிவு தலைவியுமான இவர் ஜொகூர் மாநில அம்னோ மகளிர் பிரிவு தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.கடந்த 2022-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கோத்தா தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் அவர் 5,166 வாக்குகள் வித்தியாசத்தில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உம்மி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் Sharifah Azizah Syed Zain அவர்களின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பு என்று ஜொகூர் மாநில மந்திரி பெசார் Onn Hafiz Ghazi தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்தார்.
இவரின் மரணத்தை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைத்தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.