
பாரிஸ், ஆக 2-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் மலேசியாவின் பியார்லி தான் தீனா ஜோடி அதிர்ச்சி தரும் வகையில் வீரப் போராட்டத்தில் தோல்வி கண்டது.
உலகின் முதல் தர வீராங்கனைகளாக வலம் வரும் சீனாவின்
Chen Qing Chen – jia Yi ஜோடியிடம் இவர்கள் 12-21, 21-18, 15-21என்ற புள்ளி கணக்கில் தோல்வி கண்டனர்.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு மலேசிய இளம் வீராங்கனைகள் கடுமையாக போராடினர். இருப்பினும் அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை.
இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டதால் இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெறும் வாய்ப்பு பறிபோனது. இருப்பினும் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது