காசா மீதான தாக்குதலுக்கு பதிலடி இஸ்ரேல் நிலைகள் மீது 70 ராக்கெட் வீச்சு: களத்தில் இறங்கியது ஹிஸ்புல்லா

பெய்ரூட்: காசா மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது 70 ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பு வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே நடக்கும் போரில், காசா நகரின் மீது இஸ்ரேல் இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியான தாஹியில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலை தொடர்ந்து லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது.

ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட ராணுவத் தளபதி ஃபுவாட் ஷோகோரை இஸ்ரேல் கொன்றதையடுத்து, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, இஸ்ரேல் மீது உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார்.

இந்நிலையில் தெற்கு லெபனான் மீதான இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதால், அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்தி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles