குவா மூசாங்: ஆக 3
நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி, பெரிக்கத்தான் நேஷனல் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது.
காலை 9 மணிக்கு தொடங்கிய வேட்புமனு தாக்கலில் இருவர் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இதில் தேசிய முன்னணி சார்பில் கிளாந்தான் அம்னோ இளைஞர் தலைவர் முஹம்மத் அஸ்மாவி ஃபிக்ரி அப்துல் கனியும் தேசியக் கூட்டணி சார்பில் முன்னாள் பாஸ் இளைஞரணி துணைத் தலைவர் முஹம்மத் ரிஸ்வாடி இஸ்மாயிலும் போட்டியிடுகின்றனர்.