குளுவாங், ஆக 3-
கடந்த 2022ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஜொகூர் மாநில பொது தேர்தலுக்கு பிறகு நடைபெறவிருக்கும் முதலாவது இடைதேர்தலாக இந்த குளுவாங் மக்கோத்த இடைதேர்தல் அமைய விருப்பதால்,இந்த தேர்தலுக்கு பிறகு பல அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது.
முதலில் கோல குபு பாரு இடைதேர்தலில் கடின போராட்டத்திற்கு பிறகு ஒருவகையாக ஒற்றுமை அரசாங்கம் வாகை சூடியது.
அந்த வெற்றியை கொண்டாடி முடிப்பதற்குள் சுங்கை பாக்காப் இடைதேர்தலில் தோல்வியை சந்தித்தது.
இப்போது ஒற்றுமை அரசாங்கம் சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் கிளந்தான் நீங்கிரி சட்டமன்ற இடைத்தேர்தலில் களம் இறங்கி உள்ளது.
அதுக்கு அடுத்ததாக மக்கோத்தா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றால் அதையும் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது.
குளுவாங் தொகுதி அம்னோ சில வாரங்களுக்கு முன்பு ஜசெகவுடனான உறவை முறித்து கொள்ள வேண்டும் என அறிக்கை வெளியிட்டுயிருந்தது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.
சூழ்நிலை இவ்வாரிருக்க விரைவில் நடைபெறவிருக்கும் இந்த இடைத்தேர்தல் களில் எப்படி இந்த இரண்டு கூட்டணி கட்சிகளும் ஒன்றாக தேர்தல் களத்தில் நிற்க போகிறது என்ற கேள்வியும் இங்கே எழ தான் செய்கிறது என்று அரசியல் ஆய்வாளர் சந்திரசேகரன் ஆறுமுகம் கேள்வியை முன் வைத்துள்ளார்.
இந்த இரண்டு கூட்டணிகுள்ளே கட ந்த பொதுதேர்தலில் இருந்தே ஒரு நல்ல உறவு இருப்பதாக தெரியவில்லை.
மேலும்,அந்த இரு கட்சிகளின் அரசியல் சித்தந்தம் வெவ்வேறாக இருக்க,எப்படி கூட்டணி அமைத்தார்கள் என்பது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஒரு கேள்வி இருந்து வருகிறது.
கிளந்தான் நெங்கிரி சட்டமன்ற இடைதேர்தலில் ஜசெகவை ஒதுங்கி இருக்கும் படி கேட்டு கொண்டது போல் இந்த மக்கோத்தா சட்டமன்ற இடைதேர்தலிலும் கேட்டு கொள்ளுமா என்ற கேள்வி இங்கே தோன்றுகிறது.
மக்கோத்த சட்டமன்ற தொகுதியில் உள்ள 34.52% சீன வாக்களர் களை கவர அம்னோவுக்கு ஜசெகவின் உதவி நிச்சயமாக தேவைபாடும் என்று அவர் சொன்னார்.