கிள்ளான், ஆக 4-
போர்ட் கிள்ளான் சுங்கை கிளாடி தேவி சொக்கோயில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 48 ஆம் ஆண்டு வருடாந்திர தீமிதி திருவிழா வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் பால்குடங்கள் ஏந்தி அம்மனுக்கு காணிக்கை செலுத்துவார்கள். அதே நேரத்தில் தீமிதி திருவிழாவும் நடைபெறும்.
மகேஸ்வர பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் பரிமாறப்படும். தாமான் ஸ்ரீ பெரரெம்பாங்கை சேர்ந்த ராமசாமி – சித்ரா குடும்பத்தினர் அன்னதானம் வழங்குகிறார்கள்.
அதேசமயம் காலையில் பக்தர்களுக்கு காலை சிற்றுண்டியை போர்ட் கிள்ளானைச் சேர்ந்த வேதாச்சலம் பார்வதி குடும்பத்தினர் வழங்குகிறார்கள். இரவு 6 மணிக்கு மேல் ரத ஊர்வலமும் நடைபெறுகிறது.
வட்டாரப் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கிறார்கள்.