
சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த ராஜினாமா ஏற்கப்பட்டதா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது.
நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ள நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு மீது பாஜவுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்து வருகிறது.
ஏனென்றால் எந்த நேரத்திலும் அவர்கள் காலை வாரி விட்டு சென்று விடுவார்கள் என்ற பயம் பாஜவிடம் இருந்து வருகிறது. தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருந்தால் சில தொகுதிகளை வெற்றி பெற்று இருக்கலாம். அப்படி அவர்கள் வெற்றி பெற்று இருந்தால் நமக்கு நம்பிக்கையாக இருந்து இருப்பார்கள்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு பாஜ தலைவர் அண்ணாமலை எடுத்த தவறான முடிவு தான் காரணம் என்று மேலிடம் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறது. அதிமுக கூட்டணியை முறிக்க முக்கிய காரணமே அண்ணாமலையின் தேவையில்லாத வாய் பேச்சு தான்.
கட்சியின் பெயரை தாங்கியிருக்கக்கூடிய அண்ணாவையும், ஜெயலலிதா போன்ற தலைவர்களை அவதூறாக பேசியதால் தான் அதிமுக கூட்டணியை முறித்தது என்றும், டெல்லி மேலிடம் கடும் கோபத்தில் இருந்து வருகிறது.
பாஜ தலைவர் பதவியை பிடிக்கும் ரேஸில் நிறைய பேர் தங்களுக்கு வேண்டப்பட்ட மேலிட தலைவர்களை நாட தொடங்கியுள்ளனர். இதனால் புதிய பாஜ தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது