

பிறை, ஆக 5-
கெடா அலோர் ஸ்டார் இஸ்கந்தார் தேசிய பள்ளி திடலில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி 12 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான லிகா அகாடமி கால்பந்து போட்டியில் பினாங்கு இந்திய பெண்கள் பங்கேற்கிறார்கள்.
அகாடமி துனாஸ், கெடா வனிதா, பினாங்கு வனிதா, பினாங்கு வனிதா உத்தாரா, பெர்லிஸ் வனிதா ஆகிய குழுக்களுடன் பினாங்கு இந்திய பெண்கள் குழு பலப்பரிட்சை நடத்துகிறது.
இந்த போட்டிக்காக பினாங்கு இந்திய பெண்கள் குழு தீவிர பயிற்சியை மேற்கொண்டுள்ளது என்று பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து கிளப் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
பயிற்றுநர் மல்லிகா மற்றும் அஸ்ரின் ஆகியோர் 12 வயதுக்கு உட்பட்ட பினாங்கு இந்திய பெண்கள் குழுவுக்கு தீவிர பயிற்சியை வழங்கியுள்ளனர்.
பினாங்கு இந்திய பெண்கள் குழுவின் தலைமைப் பயிற்றுநராக பேச்சி, 8 வயதுக்கு உட்பட்ட குழுவுக்கு பயிற்றுநர் பிரியா மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட பினாங்கு இந்திய பெண்கள் குழுவுக்கு பயிற்றுநர் தீபீகா ஆகியோர் திறம்பட பணியாற்றி வருகிறார் கள்.
கெடா மாநிலத்தில் நடக்கும் லீகா அகாடமி கால்பந்து போட்டியில் பினாங்கு இந்திய பெண்கள் குழுவுக்கு ஆதரவு அளிக்க ரசிகர்கள் திரண்டு வரும்படி அவர் கேட்டுக்கொள்கிறார்.
இந்த போட்டியில் வெற்றி பெற பினாங்கு இந்திய பெண்கள் குழு கடுமையாக போராடும் என்றார் அவர்