சிரம்பான்: ஆக 6-
மைபிபிபி கட்சி மீண்டும் இணைத்துக் கொள்வது குறித்து தேசிய முன்னணி கூட்டத்தில் பேசுவேன் என்று அதன் துணைத் தலைவரும் வெளியுறவு அமைச்சருமான டத்தோஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.
மைபிபிபி கட்சி ஒரு வலுவான கட்சி நெகிரி செம்பிலான் மாநிலத்தை பொருத்தவரை டத்தோ ஆறுமுகம் தலைமையில் மிகவும் சிறப்பாக செயலாற்றி வருகிறது. ஒவ்வொரு தேர்தல்களிலும் மைபிபிபி கட்சியினர் தேசிய முண்ணனி வெற்றிக்கு கடுமையாக பாடுப்டட்டு வந்துள்ளனர்.
அவர்கள் தொடர்ந்து தேசிய முண்ணனிக்கு ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதன் அடிப்படையில் மைபிபிபி கட்சி மீண்டும் தேசிய முண்ணனியில் இனைவதற்கு தேசிய முண்ணனி கூட்டத்தில் நான் பேசுவேன்.
மேலும் மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் லோகபலா அவர்களிடம் முறையாக கடிதம் அனுப்புமாறு தாம் கேட்டுக் கொள்கிறேன் என்று டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கூறினார்
முன்னதாக மைபிபிபி கட்சி ஒரு சரியான பாதையில் செல்வதற்கு இது வரை நீங்கள் எங்களுடன்தான் இருக்கிறீர்கள் என்று தேசிய முண்ணனி கட்சி பதில் வழங்கவில்லை என்று டத்தோ டாக்டர் லோகபாலா தமது உரையில் குறிப்பிட்டார்.
இதனால் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைப்பெறவுள்ள மைபிபிபி கட்சி மாநாடு வரை பார்ப்போம். அப்படி சரியான முடிவு தெரியவில்லை என்றால் கட்சி ஒரு சரியான முடிவை எடுக்கும் என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நெகிரி செம்பிலான் மாநில மைபிபிபி கட்சியின் பேராளர் மாநாடு சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது