
பாரிஸ், ஆகஸ்ட் 10 – 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் எந்த ஒரு நீர் போட்டியாளரும் இறுதி போட்டிக்கு தகுதியடையாத நிலையில் குறிப்பாக நாட்டின் டைவிங் முகாம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஒலிம்பிக்கில் இருந்து வெறுங்கையுடன் திரும்பியது.
போட்டிகளின் 14 ஆவது நாளில், அனுபவம் வாய்ந்த மூழ்காளர் நூர் டபிதா, மற்ற நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுடனான ஒப்பிட்டு தகுதி அடிப்படையில் தேர்வு பெறாததால், பெண்களுக்கான 3 மீ ஸ்பிரிங்போர்டு நிகழ்வின் இறுதிப் போட்டியில் 12 டைவர்ஸ் மத்தியில் கடைசி இடத்தைப் பிடித்தார்.
ஐந்து முயற்சிகளுக்கு பிறகு அவரால் 244.80 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. இம்முறை ஒலிம்பிக் போட்டி மலேசிய டைவிங் விளையாட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

