பூச்சோங் ஆக 10-
பூச்சோங் வட்டாரத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் 119 ஆம் ஆண்டு வருடாந்திர ஆடித் திருவிழா இன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பூச்சோங் 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தலைவர் டத்தோ புத்ரி சிவம் தலைமையில் நடைபெற்ற இந்த திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன் மற்றும் கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸி ஹான் சிறப்பு பிரமுகர்களாக கலந்து சிறப்பித்தனர்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு சார்பில் அவரின் அரசியல் செயலாளர் செகு ஆனந்த கலந்து கொண்டார். பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன் தமது சார்பில் 50,000 வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்தார்.
கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸி ஹான் தமது சார்பில் 3,000 வெள்ளி வழங்குவதாக அறிவித்தார்.
சிலாங்கூர் மாநில அரசு சார்பில் பாப்பா ராயுடு ஏற்கெனவே 20,000 வெள்ளி மானியம் வழங்கியுள்ளார்.தற்போது பூச்சோங் வட்டார மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் ஒரு கோடி வெள்ளியில் மல்டி பெபர்ஸ் மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
90 விழுக்காடு கட்டுமான பணிகள் பூர்த்தி அடைந்துள்ள நிலையில் எஞ்சிய பணிகள் விரைவில் பூர்த்தி அடையும் என்று டத்தோ புத்ரி சிவம் தெரிவித்தார்.