ஈப்போ, ஆக 10-
பேராக் மாநிலத்தில் சுக்மா போட்டியில் கலந்துக்கொள்ளும் இந்திய விளையாட்டாளுர்களுக்கு தேநீர் விருந்து வழங்கி் சிறப்பிக்கப்பட்டனர்.
அத்துடன், இந்த சுக்மா போட்டியில் கலந்துக்கொள்ளும் கபடி குழுவிற்கு 35 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி, சிலம்பம் அணியினருக்கு 28,266.16 ரிங்கிட்டும், கராத்தே குழுவிற்கு 25 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டதாக பேராக் மாநில சுகாதாரம், மனிதவளம்,ஒற்றுமை, இந்திய அரசியல் சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
இந்த 21 வது சுக்மா போட்டி சரவாக்கில் இம்மாதம் 16 ல் தொடங்கி 24 வரை கூச்சிங்கில் நடைபெறவுள்ளது.
இந்த பேராக் குழுவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் வரும் 20 முதல் 24 வரை கூச்சிங்கில் இருக்கப்போவதாக அவர் குறிப்பிட்டார்.
அவ்வேளையில் இந்த குழுவினருக்கு உதவிட அங்கு இருக்கப்போவதாகவும், அனைத்து உதவிகளும் பேராக் மாநில போட்டியாளர்களுக்கு செய்து தரப்படும்.
ஆகையால், விளையாட்டாளர்கள் தங்களின் முழு கவனத்தை தங்கள் போட்டிகளில் செலுத்தும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த உதவிகள் மற்றும் ஆதரவு உங்களின் வெற்றியை உறுதி செய்யும். ஆகையால், போட்டியாளர்கள் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் ஆலோசனை வழங்கினார்.
இந்த சுக்மா வெற்றியின் வாயிலாக இவர்கள் தங்கள் உயர்கல்வியை முடித்துவிட்டு பேராக்கில் வேலை செய்ய பேருதவியாக அமையும். ஆகையால், நமது இந்திய சமூக போட்டியாளர்கள் சிறந்த
முறையில் வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.
அதோடு இவ்வாறான வெற்றியின் வாயிலாக நாட்டை பிரதிநிதித்து வருங்காலத்தில் மிளிர முடியும் என்று அ.சிவநேசன் கூறினார்.