
பிறை, ஆக 13-
13 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ரகு கிண்ண கால்பந்து போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பினாங்கு பிறையில் அதிகரிப்பூர்வமாக தொடங்கியது.
MPKK பிறை K. Rago Cup கிண்ண கால்பந்து போட்டியில் அதிகமான பெண்கள் குழு கலந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.
இந்நிகழ்ச்சியை MBSP கவுன்சிலர் பொன்னுத்திரை மற்றும் MPKK பிறை செயலாளர் .K. ரகுநாதன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்
MPKK பிறை உறுப்பினர்கள், JBPP தலைவர் திரு. ஹரி மற்றும் பினாங்கு மாநில இந்திய கால்பந்துச் சங்கத்தின் பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உள்ளூர் மற்றும் வெளியூர் போட்டிகளில் பெண்கள் குழு பங்கேற்கும்
லீக் வடிவத்தில் 4 அணிகள் போட்டியிடும். அதிக புள்ளிகளை பெரும் குழுக்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி மற்றும் பிறை சட்டமன்ற தொகுதி இந்த போட்டிக்கு முழு ஆதரவு வழங்கியிருப்பதாக
பினாங்கு மாநில இந்திய பெண்கள் கால்பந்து கிளப் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.