கோலாலம்பூர், ஆகஸ்ட் 13: கம்போங் செண்டோர் குவாந்தான், பகாங்கில் உள்ள ஒவ்வொரு பழைய வீட்டிற்கும் ஆரம்ப உதவியாக RM15,000 பழுதுபார்க்கும் செலவிற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கினார்.
பிரதமர் தனது அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் பௌசி மூலம் இந்த உதவியை வழங்கினார் என முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
“அஹ்மட் ஃபர்ஹான் அவ்வீடுகளின் நிலையை ஆய்வு செய்தார். மேலும், வீடுகளை பழுது பார்க்கும் செலவுக்காக ஒவ்வொரு வீட்டிற்கும் RM15,000 ஆரம்ப உதவியாக வழங்கினார்,” என்று பிரதமர் தெரிவித்தார்.