ஷாருக்கான், அமீர்கான் இல்லை…ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் வலம் வருகிறார்!

சென்னை, ஆக 13-
ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக ரஜினிகாந்த் முதல் இடத்தில் உள்ளார் என்ற பரபரப்பான செய்தி வெளியாகி உள்ளது.

புரூஸ் லீ மற்றும் ஜாக்கி சான் போன்ற சூப்பர் ஸ்டார்களின் பெயர்கள்தான் ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்று உலகெங்கிலும் பரவலாக பேசப்பட்டது.

பின்னர், 21ஆம் நூற்றாண்டில் ஷாருக்கான் மற்றும் அக்சய் குமார் போன்றவர்கள் உலக அளவில் பிரபலமடைந்ததால் அது பாலிவுட்டுக்கு ஆதரவாக மாறியது.

ஆனால் இப்போது, 72 வயதான தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆசியாவில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக இருக்கிறார்.

ரஜினியின் 171ஆவது படமான லோகேஷ் கனகராஜின் கூலி படத்திற்காக இவர் ரூ.280 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles